வேறு வேலைக்குச் செல்வதைத் தடுக்க வீராங்கனைகளுக்கு அதிக சம்பளம்: ஐசிசி கோரிக்கை

ஆஸ்திரேலியாவில் வீராங்கனைகளுக்கு 8 மடங்கு அதிகமான சம்பளம் வழங்கப்படுகிறது...
வேறு வேலைக்குச் செல்வதைத் தடுக்க வீராங்கனைகளுக்கு அதிக சம்பளம்: ஐசிசி கோரிக்கை

ஆஸ்திரேலிய அணியைப் பாருங்கள். அவர்கள் வழங்குவதுபோல கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு நல்ல ஊதியத்தை அளியுங்கள் என்று மகளிர் கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் க்ளேர் கோனோர் அறிவுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்து மகளிர் அணியின் முன்னாள் கேப்டனும் ஐசிசி மகளிர் கிரிக்கெட்டின் தலைமை நிர்வாகியுமான க்ளேர் கோனோர், இந்த விவகாரம் குறித்துக் கூறியதாவது: 

ஆஸ்திரேலியாவில் வீராங்கனைகளுக்கு 8 மடங்கு அதிகமான சம்பளம் வழங்கப்படுகிறது. இதை மற்ற நாடுகள் கவனிக்கவேண்டும். வீராங்கனைகள் எந்தளவுக்குச் சம்பளம் பெறுகிறார்கள் என்பதைத் தீவிரமாக யோசிக்கவேண்டும். கிரிக்கெட் வீராங்கனைகளை நாம் சரிவர கவனிக்காவிட்டால் அவர்கள் வேறு விளையாட்டையோ அல்லது வேறு தொழிலையோ தேர்வு செய்துவிடுவார்கள். அது கொடுமையானது என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட்டில் ஊதியம் தொடர்பாக தற்போது ரூ. 359 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் மகளிர் கிரிக்கெட்டில் ஊதியத்துக்கு ரூ. 49 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

க்ளேர் மேலும் கூறியதாவது: ஆண்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு நிறைய வருமானத்தைப் பெற்றுத் தருகிறார்கள். மகளிர் கிரிக்கெட் தற்போதுதான் பயணத்தை ஆரம்பித்துள்ளது. அதனால்தான் ஊதியத்தில் வேறுபாடுகள் உள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com