நெதர்லாந்து வீரர் ஆர்ஜென் ராபன் ஓய்வு

நெதர்லாந்து கால்பந்து வீரர் ஆர்ஜென் ராபன் சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.
நெதர்லாந்து வீரர் ஆர்ஜென் ராபன் ஓய்வு

நெதர்லாந்து கால்பந்து வீரர் ஆர்ஜென் ராபன் சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.
2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க நெதர்லாந்து அணி தகுதி பெறாத நிலையில், கால்பந்துக்கு முழுக்கு போட்டுள்ளார் ராபன். நெதர்லாந்து அணிக்காக 96 ஆட்டங்களில் விளையாடியுள்ள ராபன், 37 கோல்களை அடித்துள்ளார். அவருடைய சிறப்பான ஆட்டத்தால் 2010 உலகக் கோப்பை போட்டியில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய நெதர்லாந்து அணி, அதில் 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோற்றது. 2014 உலகக் கோப்பை போட்டியில் நெதர்லாந்து அணி அரையிறுதி வரை முன்னேறுவதற்கு உதவினார் ராபன். 
33 வயதான ராபன், 14 ஆண்டுகள் நெதர்லாந்து அணிக்காக விளையாடியிருக்கிறார். அது குறித்துப் பேசிய அவர், '2010, 2014 உலகக் கோப்பை போட்டிகள், எப்போதுமே எனது மனதில் இருந்து நீங்காது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com