முதல் ஓவரில் ரோஹித், கோலி விக்கெட்டை இழந்ததே தோல்விக்கு காரணம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் முதல் ஓவரில் ஆட்டமிழந்ததே தோல்விக்கு காரணம் என்று
முதல் ஓவரில் ரோஹித், கோலி விக்கெட்டை இழந்ததே தோல்விக்கு காரணம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் முதல் ஓவரில் ஆட்டமிழந்ததே தோல்விக்கு காரணம் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தெரிவித்தார். 
அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. இதில் ஆஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் பெஹ்ரென்டார்ஃப் 21 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த புவனேஸ்வர் குமார் மேலும் கூறியதாவது: ஆஸ்திரேலிய வீரர் பெஹ்ரென்டார்ஃப் சிறப்பாக பந்துவீசினார். அவர் ஆடுகளத்தை முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டார். இந்த ஆடுகளம் துல்லியமாக பந்துவீசுவதற்கு ஏற்றதாகும். 
டி20 கிரிக்கெட்டில் 3 அல்லது 4 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை முதல் ஓவரிலேயே இழந்ததுதான் எங்களுடைய தோல்விக்கு காரணம். 
பெஹ்ரென்டார்ஃப் பந்தை நேர்த்தியாக ஸ்விங் செய்ததோடு, வேகமாகவும் வீசினார். நான் ஏற்கெனவே சொன்னதுபோல டி20 கிரிக்கெட்டில் 4 விக்கெட் வீழ்த்த அதிர்ஷ்டம் வேண்டும். அந்த அதிர்ஷ்டம் பெஹ்ரென்டார்ஃபுக்கு இருந்தது. 
இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் நாங்கள் சரிவிலிருந்து மீள முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை. இந்த தோல்விக்கு தனிப்பட்ட யார் மீதும் பழிசுமத்த விரும்பவில்லை. இந்த நாள் எங்களுடையதாக இல்லை . 
நாங்கள் ஆரம்பத்தில் விக்கெட் வீழ்த்தினோம். எனினும் ஒரு போட்டியில் வெல்ல வேண்டுமானால், மிடில் ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்துவது முக்கியமானதாகும். அதை எங்களால் செய்ய முடியவில்லை. எங்களைவிட ஆஸ்திரேலியர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com