யு-17 உலகக் கோப்பை கால்பந்து : காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரான்ஸ், இங்கிலாந்து

17 வயதுக்குள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
குவாஹாட்டியில் நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய பிரான்ஸ்-ஜப்பான் அணிகள்.
குவாஹாட்டியில் நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய பிரான்ஸ்-ஜப்பான் அணிகள்.

17 வயதுக்குள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியைத் தோற்கடித்தது. 
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் அமைன் கோய்ரி 13 மற்றும் 71-ஆவது நிமிடங்களில் கோலடித்தார். ஜப்பான் அணிக்கு 73-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதில் டைசே மியாஷிரோ கோலடித்தார். எனினும் ஜப்பானுக்கு இது ஆறுதல் கோலாக மட்டுமே அமைந்தது. அதேநேரத்தில் தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றியைப் பெற்ற பிரான்ஸ், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவை வீழ்த்தியது. இது அந்த அணி பெற்ற 2-ஆவது வெற்றியாகும். இதன்மூலம் அடுத்த சுற்றை உறுதி செய்தது இங்கிலாந்து. 
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 39-ஆவது நிமிடத்தில் பிரௌஸ்டரும், 48-ஆவது நிமிடத்தில் ஃபாடெனும், 55-ஆவது நிமிடத்தில் சான்கோவும் கோலடிக்க, இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. 
கடைசிக் கட்டத்தில் போராடிய மெக்ஸிகோ அணி, 65 மற்றும் 72-ஆவது நிமிடங்களில் இரு கோல்களை அடித்தது. இந்த இரு கோல்களையும் லெய்னீஸ் அடித்தார். எனினும் மெக்ஸிகோ அணியால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. 
குவாஹாட்டியில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஹோண்டுராஸ் அணி 5-0 என்ற கோல் கணக்கில் நியூ கேல்டோனியாவை தோற்கடித்தது. இதன்மூலம் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. 
கொல்கத்தாவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இராக் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சிலியைத் தோற்கடித்தது. 
இன்றைய ஆட்டங்கள் 
மாலி-நியூஸிலாந்து
இடம்: புது தில்லி, 
நேரம்: மாலை 5
துருக்கி-பராகுவே 
இடம்: நவி மும்பை, 
நேரம்: மாலை 5
இந்தியா-கானா 
இடம்: புது தில்லி, 
நேரம்: இரவு 8
அமெரிக்கா-கொலம்பியா
இடம்: நவி மும்பை, 
நேரம்: இரவு 8

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com