ஷாங்காய் மாஸ்டர்ஸ்: காலிறுதியில் நடால், ஃபெடரர்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
காலிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் ரோஜர் ஃபெடரர்.
காலிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் ரோஜர் ஃபெடரர்.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
சீனாவின் ஷாங்காய் நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நடால் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியை தோற்கடித்தார். 
நடால் தனது காலிறுதியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை சந்திக்கிறார். டிமிட்ரோவ் தனது முந்தைய சுற்றில் 6-3, 7-6 (3) என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் சாம் கியூரியை வீழ்த்தினார். காலிறுதி குறித்துப் பேசிய நடால், "கிரிகோருடனான காலிறுதி ஆட்டம், கடும் சவால் நிறைந்ததாக இருக்கும். நான் என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்' என்றார்.
ரோஜர் ஃபெடரர் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் உக்ரைனின் அலெக்சாண்டர் டோல்கோ போலோவை தோற்கடித்தார். அடுத்ததாக பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட்டை சந்திக்கிறார் ரோஜர் ஃபெடரர். 
முன்னதாக ரிச்சர்ட் காஸ்கட் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 7-5, 6-7 (5), 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான ஜில்ஸ் சைமனை தோற்கடித்தார்.
ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 3-6, 7-6 (5), 6-4 என்ற செட் கணக்கில் உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார். ஜுவான் மார்ட்டின் தனது காலிறுதியில் செர்பியாவின் விக்டர் டிராய்க்கியை சந்திக்கிறார். 
தோல்வி குறித்துப் பேசிய அலெக்சாண்டர் ஸ்வெரேவ், "நான் இந்த ஆட்டத்தில் எப்படி தோற்றேன் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் எனது சர்வீûஸ இழந்த பிறகு என்னால் சரிவிலிருந்து மீள முடியவில்லை. கடைசி வரை ஜுவான் மார்ட்டினின் சர்வீûஸ முறியடிக்க முடியவில்லை' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com