வேளாண் ஆராய்ச்சிக் கழக விளையாட்டுப் போட்டி: கொச்சி மீன் வள ஆராய்ச்சி நிலையம் சாம்பியன்

கோவையில் நடைபெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக நிறுவனங்களுக்கு இடையிலான தென்மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில் கொச்சி

கோவையில் நடைபெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக நிறுவனங்களுக்கு இடையிலான தென்மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில் கொச்சி மத்தியக் கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் விளையாட்டுப் போட்டி கோவையில் அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கியது. தடகளம், வாலிபால், சைக்கிள் பந்தயம், கால்பந்து, கபடி, கூடைப்பந்து, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், செஸ், கேரம் ஆகிய விளையாட்டுகள் தனி நபர் மற்றும் அணி பிரிவுகளில் நடைபெற்றன. 
தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா மாநிலங்களிலிருந்து இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் 23 நிறுவனங்களைச் சேர்ந்த 550 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். பல்வேறு விளையாட்டுகளின் இறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தன.
இதில், தடகளத்தில் காசர்கோடு மலைத் தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவன வீரர் இ.எம்.அனீஷ் ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். இதே நிறுவனத்தின் கே.பிரீத்தி மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். 
இதேபோல, குழு போட்டிகளில் கொச்சி மத்தியக் கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. காசர்கோடு ஆராய்ச்சி நிறுவனம் இரண்டாமிடம் பிடித்தது. 
வெற்றி பெற்ற அணிகள் மற்றும் தனி நபர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு கோவை, கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி மைய இயக்குநர் பக்ஷிராம் கோப்பைகளை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com