தமிழகம்-திரிபுரா ஆட்டம் மழையால் பாதிப்பு

தமிழகம்-திரிபுரா இடையிலான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் 3-ஆவது நாளான திங்கள்கிழமை 7 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. 

தமிழகம்-திரிபுரா இடையிலான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் 3-ஆவது நாளான திங்கள்கிழமை 7 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. 
சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த திரிபுரா அணி 96.1 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் எஸ்.கே.படேல் 99, யஷ்பால் சிங் 96 ரன்கள் குவித்தனர். தமிழகம் தரப்பில் விக்னேஷ் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய தமிழக அணியில் அபிநவ் முகுந்த் 76 ரன்கள் சேர்த்து வெளியேற, வாஷிங்டன் சுந்தர் சதமடித்தார். இதனால் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் தமிழகம் 81 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் குவித்திருந்தது. வாஷிங்டன் சுந்தர் 156, இந்திரஜித் 73 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
3-ஆவது நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் மேலும் 3 ரன்கள் சேர்த்த நிலையில், அதாவது 159 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களம்புகுந்த தினேஷ் கார்த்திக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு அஸ்வின் களம்புகுந்தார். 7 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. 
மழை தொடர்ந்ததால் 3-ஆவது நாள் ஆட்டம் 7 ஓவர்களோடு முடித்துக் கொள்ளப்பட்டது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் தமிழகம் 88 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்துள்ளது. இந்திரஜித் 89, அஸ்வின் 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இதன்மூலம் தமிழக அணி, முதல் இன்னிங்ஸில் 99 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com