நியூஸி.-பிசிசிஐ வாரிய தலைவர் அணிகள் இன்று மோதல்

நியூஸிலாந்து-பிசிசிஐ வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான முதல் பயிற்சி (50 ஓவர்) ஆட்டம் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

நியூஸிலாந்து-பிசிசிஐ வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான முதல் பயிற்சி (50 ஓவர்) ஆட்டம் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்த பயிற்சி ஆட்டம் நியூஸிலாந்து அணிக்கு மிக முக்கியமானதாகும். எனவே நியூஸிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான கேப்டன் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், மார்ட்டின் கப்டில் ஆகியோர் இந்த ஆட்டத்தில் ரன் குவிக்க முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிசிசிஐ தலைவர் லெவன் அணி, ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் களமிறங்குகிறது. ஷ்ரேயஸ், ரிஷப் பந்த், கருண் நாயர், பிரித்வி ஷா ஆகியோருக்கு இந்த ஆட்டம் நல்ல வாய்ப்பாகும். சீனியர் அணியில் இடம் கிடைக்காத கே.எல்.ராகுல், இந்த அணியில் இடம்பிடித்துள்ளது கூடுதல் பலமாகும். வேகப்பந்து வீச்சில் தவல் குல்கர்னி, ஜெயதேவ் உனட்கட் ஆகியோரையும், சுழற்பந்து வீச்சில் சபேஸ் நதீம், ராகுல் சாஹர் ஆகியோரையும் நம்பியுள்ளது இந்தியா. 
இந்த ஆட்டம் காலை 9 மணிக்குத் தொடங்கவுள்ளது. எனினும் மும்பையில் தொடர் மழை பெய்ததன் காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக உள்ளது. அதனால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com