ரசிகர்கள் தந்த உற்சாகத்தால் அமெரிக்க வீரர்களின் தாயகமான இந்தியா!

பராகுவேக்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாடியபோது இந்திய ரசிகர்கள் தந்த உற்சாகத்தால் தாய் மண்ணில் விளையாடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது என்று அமெரிக்க கால்பந்து வீரர் டிம் வியே தெரிவித்தார்.

பராகுவேக்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாடியபோது இந்திய ரசிகர்கள் தந்த உற்சாகத்தால் தாய் மண்ணில் விளையாடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது என்று அமெரிக்க கால்பந்து வீரர் டிம் வியே தெரிவித்தார்.
17 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்கா 5-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை பந்தாடியது. இந்த ஆட்டத்தில் அமெரிக்க வீரர் டிம் வியே ஹாட்ரிக் கோலடித்தார். 
இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிம் வியே மேலும் கூறியதாவது: நாங்கள் பராகுவேயுடன் விளையாடுவதற்காக மைதானத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் எனது பெயரையும், அமெரிக்கா பெயரையும் கூறி எங்களை உற்சாகப்படுத்தினர். அப்போது வீரர்களாகிய நாங்கள் அனைவரும் அமெரிக்காவுக்கே திரும்பி வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாக பேசிக் கொண்டோம். ரசிகர்களின் ஆதரவு எங்களின் நம்பிக்கையை அதிகரித்தது. அமெரிக்க அணிக்கு ஆதரவு தெரிவித்ததற்காக ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்களும் இந்தியாவை நேசிக்கிறோம்.
பராகுவேக்கு எதிராக நான் அடித்த 2-ஆவது கோல், எனது கால்பந்து வாழ்க்கையில் அடித்த தலைசிறந்த கோல்களில் ஒன்று. கிறிஸ் கிளாஸ்டர் எனக்கு பந்தைக் கடத்தாமல் இருந்திருந்தால், அந்த கோல் சாத்தியமாகி இருக்காது. அதற்காக அவருக்கு நன்றி. அதுபோன்ற அழகான கோலை இதற்கு முன்னர் நான் அடித்ததில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com