இந்திய தொடருக்கான நியூஸிலாந்து அணியில் 'திடீர்' மாற்றம்

இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான நியூஸிலாந்து அணியில் வியாழக்கிழமை திடீர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்திய தொடருக்கான நியூஸிலாந்து அணியில் 'திடீர்' மாற்றம்

இந்தியா சுற்றுப்பயணம் செய்யும் நியூஸிலாந்து அணி 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

அக்டோபர் 22 முதல் நவம்பர் 7 வரை இப்போட்டித் தொடர் நடைபெறவுள்ளன. ஒருநாள் போட்டிகள் மும்பை, புணே, கான்பூர் ஆகிய நகரங்களிலும், டி20 போட்டிகள் டெல்லி, ராஜ்கோட், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலும் நடைபெறவுள்ளன.

எனவே இத்தொடருக்கான நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா வந்த நியூஸிலாந்து அணி வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. மேலும் இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் பங்கேற்று விளையாடுகிறது.

இந்நிலையில், காயம் காரணமாக நியூஸிலாந்து சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்லே இத்தொடரில் இருந்து விலகினார். இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு எதிராக செவ்வாய்கிழமை நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.

பின்னர் நடந்த மருத்துவப் பரிசோதனையில் வலதுபுறத்தில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் விலகியதாக நியூஸிலாந்து அணி பயிற்சியாளர் தெரிவித்தார். இதன்காரணமாக டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த சக சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதி, ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார்.

ஒருநாள் அணி: 

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், காலின் டி கிராண்ட்ஹோம், மார்ட்டின் கப்டில், மேட் ஹென்றி, டாம் லதாம், ஹென்றி நிகோலஸ், ஆடம் மில்னி, கோலின் மன்றோ, இஷ் சோதி, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சேன்ட்னர், டிம் செளதி, ராஸ் டெய்லர், ஜார்ஜ் வொர்கர்.

டி20 அணி: 

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டாம் ப்ரூஸ், காலின் டி கிராண்ட்ஹோம், மார்ட்டின் கப்டில், மேட் ஹென்றி, டாம் லதாம், ஹென்றி நிகோலஸ், ஆடம் மில்னி, கோலின் மன்றோ, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சேன்ட்னர், இஷ் சோதி, டிம் செளதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com