ஆசிய கோப்பை ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தியது இந்தியா

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி 6}2 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை வியாழக்கிழமை வீழ்த்தியது.

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி 6}2 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை வியாழக்கிழமை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி கடைசி நேரம் வரையில் 5}0 என முன்னிலை பெற்றிருந்தது. இறுதி நேரத்தில் சற்று மீண்ட மலேசிய அணி 2 கோல்களை ஸ்கோர் செய்தது. இருப்பினும், இந்தியா எஞ்சியுள்ள நேரத்தில் பதிலடியாக ஒரு கோல் அடித்து 6}2 என்ற கோல் கணக்கில் வென்றது.
இந்த ஆட்டத்தில் 14}ஆவது நிமிடத்தில் இந்தியா தனது கோல் கணக்கை தொடங்கியது. அணியின் ஆகாஷ்தீப் அருமையாக ஒரு ஃபீல்டு கோல் அடித்தார். அதையடுத்து உடனடியாக கிடைத்த கோல் வாய்ப்பையும், தொடர்ந்து கிடைத்த இரு பெனால்டி வாய்ப்புகளையும் கோலாக மாற்ற தவறியது மலேசிய அணி.
ஆட்டத்தின் 19}ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். தொடர்ந்து, 24}ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் உத்தப்பா ஒரு கோல் அடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் இந்தியா 3}0 என முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2}ஆவது பாதி ஆட்டத்தில் 33 மற்றும் 40}ஆவது நிமிடத்தில் இந்தியா சார்பில் முறையே குர்ஜந்த் சிங் மற்றும் எஸ்.வி.சுனில் தலா ஒரு கோல் அடித்தனர். இவ்வாறாக இந்தியா 5}0 என முன்னிலை பெற்றிருந்தது. ஆட்டத்தின் 50}ஆவது நிமிடத்தில் மலேசிய அணிக்கு மீண்டும் கிடைத்த ஒரு பெனால்டி வாய்ப்பை அணியின் ராஸி ரஹிம் கோலாக மாற்றினார்.
தொடர்ந்து 59}ஆவது நிமிடத்தில் அந்த அணியின் ரமதான் ரோஸ்லி ஒரு கோல் அடிக்க, மலேசிய அணி 2}5 என முன்னேறியது. எனினும், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் (60}ஆவது) இந்திய வீரர் சர்தார் சிங் ஒரு கோல் அடிக்க, இந்தியா 6}2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதையடுத்து 3}ஆவது இடத்துக்கான போட்டியில், சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா}பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இறுதிச்சுற்றில் மலேசியா}தென் கொரியா அணிகள் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com