ஒருநாள் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

இலங்கைக்கு எதிரான 3}ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 3}0 என முன்னிலை வகிக்கிறது.

இலங்கைக்கு எதிரான 3}ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 3}0 என முன்னிலை வகிக்கிறது.
அபுதாபியில் புதன்கிழமை பகலிரவாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் 42.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கையில் கேப்டன் உபுல் தரங்கா அதிகபட்சமாக 80 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்தார். டிக்வெல்லா 18, சண்டிமல் 19, கபுகேதரா 18, திரிமானி 28, திசர பெரேரா 38, சமீரா 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். சிறிவர்தனா, தனஞ்ஜெயா ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஷாதாப் கான் 2, ஜுனைத் கான், முகமது ஹஃபீஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 209 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய பாகிஸ்தான் தரப்பில் இமாம் உல் ஹக் 125 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 100 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். ஃபகார் ஸமான் 29, பாபர் ஆஸம் 30 ரன்களில் பெவிலியன் திரும்பினர். முகமது ஹஃபீஸ் 34, ஷோயிப் மாலிக் ரன்கள் இன்றி ஆடிக் கொண்டிருந்த நிலையில் பாகிஸ்தான் 209 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
இலங்கை தரப்பில் காமேஜ், வான்டர்சே, திசர பெரேரா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பாகிஸ்தானின் இமாம் உல் ஹக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com