டென்மார்க் ஓபன்: சாய்னா முன்னேற்றம்; சிந்து வெளியேற்றம்

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் 2}ஆவது சுற்றுக்கு முன்னேற, பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் 2}ஆவது சுற்றுக்கு முன்னேற, பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஒன்றில் ஒலிம்பிக் சாம்பியனும், ஸ்பெயின் வீராங்கனையுமான கரோலினா மரினை எதிர்கொண்டார் சாய்னா. இருவருக்கும் இடையே 43 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் சாய்னா 22}20, 21}18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதுவரை கரோலினாவை 9 முறை சந்தித்துள்ள சாய்னா, தனது 5}ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளார். இதன்மூலம், கடந்த மாதம் ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் முதல் சுற்றில் கரோலினாவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் சாய்னா.
இதனிடையே, மற்றொரு முதல் சுற்றில் ஒலிம்பிக் வெள்ளி மங்கையான பி.வி.சிந்து, முதல் சுற்றில் சீனாவின் சென் யுஃபெயிடம் 17}21, 21}23 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். கொரிய ஓபன் வெற்றிக்குப் பிறகு, சிந்து முதல் சுற்றில் தோற்று வெளியேறுவது இது 2}ஆவது முறையாகும். முன்னதாக, ஜப்பான் ஓபன் போட்டியிலும் அவர் இதேபோல் தோல்வி கண்டிருந்தார்.
ஸ்ரீகாந்த், பிரணாய் வெற்றி: டென்மார்க் ஓபன் பாட்மிண்டனின் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுகளில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஹெச்.எஸ்.பிரணாய் வெற்றி பெற்றனர். இதில் ஸ்ரீகாந்த் 21}17, 21}15 என்ற செட் கணக்கில் சக இந்தியரான சுபாங்கரை வென்றார். இதையடுத்து ஸ்ரீகாந்த் 2}ஆவது சுற்றில் தென் காரியாவின் ஜியான் ஹையோக் ஜின்னை சந்திக்கிறார்.
இதேபோல், டென்மார்க்கின் எமில் ஹோல்ஸ்டை 21}18, 21}19 என்ற செட் கணக்கில் வென்ற பிரணாய், தனது 2}ஆவது சுற்றில் மலேசியாவின் லீ சாங் வெயை எதிர்கொள்கிறார்.
இதனிடையே, கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றுகளில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்}அஸ்வினி பொன்னப்பா ஜோடியும், பிரணவ் ஜெர்ரி}சிக்கி ரெட்டி ஜோடியும் தோல்வி கண்டன. அதேபோல், ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றுகளில் சாத்விக்சாய்ராஜ்}சிரக் ஷெட்டி ஜோடியும், மானு அத்ரி}சுமித் ரெட்டி ஜோடியும் தோற்று வெளியேறின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com