தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான 2}ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசத்துக்கு எதிரான 2}ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 2}0 என முன்னிலை பெற்றுள்ளது அந்த அணி.
இரு அணிகளுக்கும் இடையே புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 353 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வங்கதேசம் 47.5 ஓவர்களில் 249 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தென் ஆப்பிரிக்க தரப்பில் டி வில்லியர்ஸ் அதிகபட்சமாக 104 பந்துகளில் 15 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 176 ரன்கள் விளாசினார். 
வங்கதேசத்தின் ரூபெல் ஹுசைன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
வங்கதேச பேட்டிங்கில் இம்ருல் கயெஸ் அதிகபட்சமாக 77 பந்துகளில் 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 68 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்காவின் ஃபெலுக்வாயோ 4 விக்கெட்டுகள் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com