உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்: இறுதிச் சுற்றில் இந்திய அணி

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான அணிப் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்தியா, அதில் கொலம்பியாவை எதிர்கொள்கிறது.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான அணிப் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்தியா, அதில் கொலம்பியாவை எதிர்கொள்கிறது.
முன்னதாக நடைபெற்ற அரையிறுதியில் ஜெர்மனியை எதிர்கொண்ட இந்தியா 232-227 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. இந்த இந்திய அணியில் திரிஷா தேப், லில்லி சானு, ஜோதி சுரேகா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இறுதிச்சுற்று குறித்து ஜோதி சுரேகா கூறுகையில், "இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. அரையிறுதியில் விளையாடியதைப் போன்றே அந்தச்சுற்றிலும் சிறப்பாக விளையாடுவோம். கொலம்பியா அணியும் சிறப்பாக விளையாடக் கூடியது. எனவே அவர்களுக்கு எதிரான ஆட்டம் விறு விறுப்பானதாக இருக்கும்' என்றார்.
இதனிடையே, தனிநபர் பிரிவில் வெளியேற்றும் (எலிமினேஷன்) ஆட்டத்தில், திரிஷா தேப் 232 புள்ளிகள் பெற்று ரஷிய வீராங்கனையையும், லில்லி சானு 233 புள்ளிகள் பெற்று டென்மார்க் வீராங்கனையையும், ஜோதி சுரேகா 232 புள்ளிகளுடன் ஜெர்மனி வீராங்கனையையும் வென்றனர். இதில் லில்லி சானு, ஜோதி சுரேகா ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் வர, திரிஷா தேப் 17-ஆவது இடத்தைப் பிடித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com