ஒருநாள் தரவரிசை: இந்தியாவை பின்னுக்கு தள்ளியது தென் ஆப்பிரிக்கா

ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில், அணிகளுக்கான பட்டியலில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி தென் ஆப்பிரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில், அணிகளுக்கான பட்டியலில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி தென் ஆப்பிரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டதை அடுத்து தென் ஆப்பிரிக்கா இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா தலா 120 புள்ளிகளுடன் இருந்தாலும், தசம புள்ளிகள் வித்தியாசத்திலேயே இந்தியா 2-ஆவது இடத்தில் உள்ளது.
வரும் 22-ஆம் தேதி நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளதால், மீண்டும் முதலிடத்துக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
கோலிக்கு பின்னடைவு: இதனிடையே, ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி 2-ஆவது இடத்துக்கு இறங்கியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 176 ரன்கள் விளாசிய தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ், முதலிடத்துக்கு வந்துள்ளார்.
அதேபோல், 5-ஆவது இடத்தில் இருந்த இந்தியாவின் ரோஹித் சர்மா 2 இடங்கள் இறங்கி, 7-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பூம்ரா, சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் ஆகியோர் தலா ஓரிடம் சறுக்கி, முறையே 6 மற்றும் 8-ஆவது இடத்துக்கு வந்துள்ளனர். பாகிஸ்தானின் ஹசன் அலி, 6 இடங்கள் முன்னேறி பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு வந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com