இன்று தொடங்குகிறது நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: வெற்றி நடையை தொடருமா இந்தியா?

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
கானா வீரரிடம் இருந்து பந்தை பறிக்க முயலும் மாலி வீரர். பயிற்சியில் நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன்
கானா வீரரிடம் இருந்து பந்தை பறிக்க முயலும் மாலி வீரர். பயிற்சியில் நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன்

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
சொந்த மண்ணில் சமீபத்தில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி நடை போட்டது இந்திய அணி. அந்த நம்பிக்கை மற்றும் உத்வேகத்துடன் நியூஸிலாந்தையும் தற்போது எதிர்கொள்ளத் தயாராகியுள்ளது கோலியின் படை.
இந்திய அணியின் பேட்டிங்கைப் பொருத்த வரையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடாத ஷிகர் தவன், இந்தத் தொடரில் களம் திரும்பி பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
தொடக்க வீரர் ரோஹித் சர்மா இந்தத் தொடரிலும் தனது ரன்களால் அணியின் ஸ்கோரை உயர்த்தி பக்கபலமாக இருப்பார். மிடில் ஆர்டரில் கேப்டன் கோலி, பாண்டியா, தோனி உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர்.
பந்துவீச்சைப் பொருத்த வரையில், "சைனாமேன்' குல்தீப் சிங், யுவேந்திர சாஹல், அக்ஸர் படேல் ஆகியோர் சுழற்பந்துவீச்சின் மூலம் நியூஸிலாந்து அணிக்கு சவால் அளிக்க உள்ளனர். வேகப்பந்துவீச்சில், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பூம்ரா ஆகியோர் மிரட்ட வருகின்றனர்.
மறுபுறம், நியூஸிலாந்து அணியைப் பொருத்த வரையில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்திலுமே போதிய பலத்துடன் திகழும் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டிய சவாலான நிலையில் களம் காண்கிறது.
அந்த அணியின் பேட்டிங் வரிசையில் பலம் சேர்க்கும் ராஸ் டெய்லர், தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில், கேப்டன் கேன் வில்லியம்சன், டாம் லதாம் ஆகியோர் இந்திய பந்து வீச்சாளர்களை பதம் பார்க்க வருகின்றனர். 
அந்த அணியின் டிரென்ட் போல்ட், டிம் செளதி, மிட்செல் சேன்ட்னர் உள்ளிட்டோரின் பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் கவனமுடன் கையாள வேண்டியிருக்கும்.


அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவன், அஜிங்க்ய ரஹானே, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பூம்ரா, புவனேஸ்வர் குமார், ஷர்துல் தாக்குர்.
நியூஸிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், காலின் டி கிரான்ட்ஹோம், மார்ட்டின் கப்டில், மட் ஹென்றி, டாம் லதாம், ஹென்றி நிகோலஸ், ஆடம் மில்னே, காலின் மன்ரோ, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சேன்ட்னர், டிம் செளதி, ராஸ் டெய்லர், ஜார்ஜ் வொர்கர், ஐஷ் சோதி.
போட்டி நேரம்: மதியம் 1.30

நேரடி ஒளிபரப்பு: 
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்


"புதிய விதிகள் ஆட்டத்தை விறுவிறுப்பாக்கும்'

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஐசிசியின் புதிய விதிமுறைகளானது ஆட்டத்தை விறுவிறுப்பாக்கும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிராக மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மோதும் ஆட்டமே, ஐசிசி கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளின் கீழ் இந்தியா விளையாடும் முதல் ஆட்டமாகும்.
புதிய விதிமுறைகளின்படி, ரன் எடுக்க ஓடும் பேட்ஸ்மேன் கிரிûஸ தாண்டியபடி பேட்டை தரையில் படாமல் வைத்திருந்தாலும், அவர் கிரீஸýக்குள் வந்ததாகவே கருதப்படுவார். அதேபோல், எல்பிடபிள்யு விக்கெட்டில் நடுவர் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு (டிஆர்எஸ்) செய்யும்போது, நடுவர் தீர்ப்பே உறுதி செய்யப்பட்டாலும் சம்பந்தப்பட்ட அணியின் டிஆர்எஸ் வாய்ப்பு அப்படியே இருக்கும். வன்முறை உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் வீரர்களை ஆட்டத்திலிருந்து வெளியேற்றும் அதிகாரம் நடுவருக்கு உண்டு.
இந்நிலையில், இந்த புதிய விதிகள் குறித்து கோலி கூறுகையில், "புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள விதிகள் வித்தியாசமானவையாகும். இந்த விதிகள் ஆட்டத்தை விறுவிறுப்பாக்குவதுடன், விளையாட்டின் தொழில்முறை நேர்த்தியை அதிகரிக்கும். ஆகவே, புதிய விதிகள் குறித்து வீரர்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். புதிய விதிகள் காரணமாக ஆட்டத்தில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்' என்றார்.

ரஹானேவுக்கு வாய்ப்பு இல்லை?

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில், ஷிகர் தவன் அணிக்குத் திரும்புவதால் அஜிங்க்ய ரஹானே "பிளேயிங் லெவனில்' இடம்பெறாமல் போகலாம் எனத் தெரிகிறது. இதனிடையே, அதனை உறுதிப்படுத்தும் விதமாக, "ரஹானேவை மிடில் ஆர்டரில் களமிறக்குவதன் மூலம் அவரை குழப்பத்துக்கு ஆளாக்க விரும்பவில்லை' என்று கேப்டன் கோலி கூறியுள்ளார்.


பயிற்சியில் அர்ஜுன் டெண்டுல்கர்...

நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தை முன்னிட்டு, வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்ட இந்திய பேட்ஸ்மேன்களுக்கு, சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் பந்துவீசினார். 
கேப்டன் விராட் கோலி மற்றும் ஷிகர் தவன் ஆகியோர் அர்ஜுனின் பந்துவீச்சில் பேட்டிங் பயிற்சி செய்தனர். முன்னதாக, நியூஸிலாந்து அணியினர் பயிற்சி மேற்கொண்டபோதும் அவர்களுக்கு அர்ஜுன் பந்துவீசியது 
குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com