முக்கியமான வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும்: கோலி

வெளிநாடுகளில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் தொடர்களை கருத்தில் கொண்டு, அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறினார்.

வெளிநாடுகளில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் தொடர்களை கருத்தில் கொண்டு, அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறினார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை கூறியதாவது:
முக்கியமான கிரிக்கெட் தொடர்கள் தொடங்க இருக்கும் நிலையில் வீரர்களை களைப்படையச் செய்ய விரும்பவில்லை. அவர்கள் மீண்டு வருவதற்கு ஒரு குறிப்பிட்ட அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் சுழற்சி முறையில் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது.
உமேஷ் யாதவ், முகமது சமி ஆகியோருக்கு தற்போது இதன்படியே ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், முக்கியமான பேட்ஸ்மேன்களுக்கும் அவ்வாறு சுழற்சி முறையில் ஓய்வு அளிக்கப்படும். இதுதொடர்பாக அணி நிர்வாகத்துடன் கலந்துபேசி முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
உதாரணமாக, நியூஸிலாந்து அணியையே எடுத்துக் கொண்டால் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குப் பிறகு அவர்கள் எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. அது ஒரு நல்ல இடைவெளியாகும். அதுபோன்றதொரு ஓய்வு கிடைப்பதால் முக்கியமான போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று கோலி கூறினார்.
நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை அடுத்து, நவம்பரில் இலங்கையுடனான தொடரில் விளையாடும் இந்தியா, அடுத்த ஆண்டு ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவுடனான தொடருக்காக அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com