டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடர் நவம்பர் 1-ம் தேதியும், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்...
டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் நியூஸிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 49 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்து வென்றது. அந்த அணியில் லதாம்-டெய்லர் ஜோடி அபாரமாக ஆடி அணியை வெற்றிக்கு வழிநடத்தியது.

இந்நிலையில், நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடர் நவம்பர் 1-ம் தேதியும், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் நவம்பர் 16-ம் தேதியும் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடர்

இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கேஎல் ராகுல், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், தோனி, ஹார்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல், சஹால், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பூம்ரா, ஆஷிஷ் நெஹ்ரா, முகமது சிராஜ்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: (முதல் இரு டெஸ்டுகளுக்கு)

இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), கேஎல் ராகுல், முரளி விஜய், ஷிகர் தவன், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, சாஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹார்திக் பாண்டியா, முகமது சமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com