இந்திய கிரிக்கெட் அணியில் ஏன் முஸ்லீம்கள் இல்லை? சர்ச்சைக் கேள்விப் பந்தை சிக்சருக்கு விளாசிய ஹர்பஜன்!   

இந்திய கிரிக்கெட் அணியில் ஏன் முஸ்லீம்கள் இல்லை என்று முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் டிவிட்டரில் கேட்ட கேள்விக்கு, இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் அளித்த பதில் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் ஏன் முஸ்லீம்கள் இல்லை? சர்ச்சைக் கேள்விப் பந்தை சிக்சருக்கு விளாசிய ஹர்பஜன்!   

புதுதில்லி: இந்திய கிரிக்கெட் அணியில் ஏன் முஸ்லீம்கள் இல்லை என்று முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் டிவிட்டரில் கேட்ட கேள்விக்கு, இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் அளித்த பதில் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இவர் சமூக வலைத்தளமான டிவிட்டரில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரும், சர்ச்சைக்குரிய வகையில் பதவி ஓய்வு பெற்றவருமான முன்னாள் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் நேற்று முன்தினம் டிவிட்டரில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) தேர்வுக்கு குழு கொள்கைகளை விமர்சித்திருந்தார். அதில் அவர் தற்பொழுது இந்திய கிரிக்கெட் அணியில் ஏன் முஸ்லீம்கள் இல்லை? அவர்கள் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி விட்டார்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதில் அளித்து ட்வீட் செய்திருந்த ஹர்பஜன் சிங் கூறியதாவது:

இந்தியாவுக்காக விளையாடும் எல்லோருமே இந்தியர்கள்தான். அவர்களிடையே நீங்கள் ஜாதி மற்றும் நிறம் உள்ளிட்ட விஷயங்களையோ, அவர்கள் இந்துவா, முஸ்லீமா, கிறிஸ்துவரா அல்லது சீக்கியரா என்றெல்லாம் பார்க்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்துடன் டி20 போட்டித் தொடர் மற்றும் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ள இலங்கையுடனான டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணியினை பிசிசிஐ கடந்த திங்களன்று அறிவித்தது.

இதில் நியூசிலாந்து தொடரில் ஹைதராபாத்தினைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் மொஹம்மத் சிராஜ் டி20 போட்டித் தொடரிலும், அனுபவம் மிக்க வேகப்பந்து வீச்சாளர் மொஹம்மத் சமி டெஸ்ட் அணியிலும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.     

முக்கியமாக சஞ்சீவின் கேள்விக்கு பதிலளித்துள்ள ஹர்பஜன் சிங்கே கூட தற்பொழுது இந்திய அணியில் விளையாடவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com