இன்று தொடங்குகிறது பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்

பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

சமீபத்தில் டென்மார்க் ஓபன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்த், சாய்னா, சிந்து உள்ளிட்ட இந்திய வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்கின்றனர்.
இதில், இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தனது முதல் சுற்றில் இங்கிலாந்தின் ராஜீவ் ஒசெப்பை சந்திக்கிறார். அதில் வெற்றி பெறும் பட்சத்தில் 2-ஆவது சுற்றில் ஹாங்காங்கின் வாங் விங் கி வின்சென்டை சந்திக்க வாய்ப்புள்ளது.
அதேபோல், ஹெச்.எஸ்.பிரணாய் தனது முதல் சுற்றில், டென்மார்க் ஓபனில் ஸ்ரீகாந்திடம் தோல்வி கண்ட தென் கொரியாவின் லி ஹியூனை எதிர்கொள்கிறார். இந்தப் போட்டியின் பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்ட பி.காஷ்யப், தனது முதல் தகுதிச்சுற்றில் ஜெர்மனியின் ஃபாபியான் ரோத்தை சந்திக்கிறார்.
இதனிடையே, அஜய் ஜெயராம், வர்மா சகோதரர்களான சமீர், செüரவ் ஆகியோர் உடற்தகுதியின்மை காரணமாக போட்டியிலிருந்து விலகியுள்ளனர்.
சிந்து, சாய்னா: இதனிடையே, மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் ஸ்பெயினின் பீட்ரிஸ் காரெல்ûஸ எதிர்கொள்கிறார். சிந்து முன்னேறிச் செல்லும் பட்சத்தில் தனது காலிறுதியில், சீனாவின் செங் யுஃபெயுடன் மோதுவார். முன்னதாக சிந்து டென்மார்க் ஓபன் போட்டியின் முதல் சுற்றில் அவரிடம் தோல்வி கண்டிருந்தார். இந்நிலையில் சாய்னா தனது முதல் சுற்றில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோரை எதிர்கொள்கிறார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடியும், சாத்விக்சாய்ராஜ்-சிரக் ஷெட்டி ஜோடியும் களம் காண, அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி மகளிர் இரட்டையர் பிரிவில் தடம் பதிக்கிறது. கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி விளையாடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com