மதுபானக்கடையில் பணம் திருடி மாட்டிக் கொண்ட முன்னாள் கிரிக்கெட் நடுவர்! 

இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரனின் பந்துவீச்சை 'எறிவது' போல் இருக்கிறது என்று கூறி சர்ச்சைக்குள்ளான ஆஸ்திரேலிய நடுவர் டேரல் ஹேர், மதுபானக்கடையில் பணம் திருடி மாட்டிக் கொண்ட சம்பவம்.. 
மதுபானக்கடையில் பணம் திருடி மாட்டிக் கொண்ட முன்னாள் கிரிக்கெட் நடுவர்! 

மெல்போர்ன்: இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரனின் பந்துவீச்சை 'எறிவது' போல் இருக்கிறது என்று கூறி சர்ச்சைக்குள்ளான ஆஸ்திரேலிய நடுவர் டேரல் ஹேர், மதுபானக்கடையில் பணம் திருடி மாட்டிக் கொண்ட சம்பவம் தெரிய வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேரல் ஹேர் முன்னாள் கிரிக்கெட் நடுவர் தற்பொழுது 65 வயதாகும் இவர் 1992 துவங்கி 2008-இல் ஓய்வு பெறும் வரை 78 டெஸ்ட் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.

தனது பணிக்காலத்தில் 1995-ம் ஆண்டு இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி  ஒன்றின் பொழுது, இலங்கையின் முத்தையா முரளீதரனின் பந்து வீச்சை எறிவது போல் இருக்கிறது என்று ஹேர் அறிவித்தார். அத்துடன் அவர் வீசிய பந்துகளை ‘நோ-பால்’ என்று அறிவித்து பெரும் சர்ச்சைக்குள்ளானார். அதன்பின் ஐசிசியிடம் மன்னிப்புக் கடிதம் அளித்து, பின் தொடர்ந்து நடுவராக பணியாற்றினார்.

தனது பணிக்காலம் முடிவடைந்த பின்னர் ஆஸ்திரேலியாவில் மதுபானக்கடை ஒன்றில் வேலை செய்தார்.அப்பொழுது அங்கிருந்து பணத்தை திருடியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. விசாரணையின் பொழுது தன் மீதான குற்றத்தை டேரல் ஹேர் ஒப்புக் கொண்டார்.

இதன் காரணமாக அவருக்கு 18 மாத காலம் 'நன்னடத்தை உறுதிமொழி' பத்திரம் பெற்று தாக்கல் செய்யுமாறு செய்யுமாறு ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டது.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com