முக்கிய போட்டிகளில் மட்டுமே கவனம்

2018-ஆம் ஆண்டில் முக்கியமான போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில், குறைந்த எண்ணிக்கையிலான போட்டிகளிலேயே கலந்துகொள்ளப்போவதாக இந்திய பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கூறினார்.

2018-ஆம் ஆண்டில் முக்கியமான போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில், குறைந்த எண்ணிக்கையிலான போட்டிகளிலேயே கலந்துகொள்ளப்போவதாக இந்திய பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கூறினார்.
டென்மார்க்கில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த சர்வதேச ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் தென் கொரியாவின் லீ ஹியூனை வீழ்த்தி பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த்.
இந்நிலையில், அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
2018-ஆம் ஆண்டில் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவதை தவிர்த்து, முக்கியமான போட்டிகளில் மட்டும் பங்கேற்று, அதில் சிறப்பாகச் செயல்பட விரும்புகிறேன். ஏனெனில், தரவரிசையில் முன்னேறுவதற்கான நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
அடுத்த ஆண்டில் காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டி, உலக சாம்பியன்ஷிப், செய்யது மோடி ஆகியவற்றுடன் சேர்த்து மொத்தமாக 15 முதல் 17 போட்டிகளில் விளையாடவுள்ளேன்.
டென்மார்க் ஓபன் போட்டியில் சிறப்பாக விளையாடி, முக்கியமான வீரர்களை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரே ஆண்டில் 3 பட்டங்களை வெல்வது குறித்து கனவிலும் நினைக்கவில்லை. தொடர்ந்து இதேபோன்று சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் என்று ஸ்ரீகாந்த் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com