'பத்து பாலில் எட்டு விக்கெட்' : அமர்க்களப்பப்படுத்திய ஆஸ்திரேலியப் பந்து வீச்சாளர்!  

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் விளையாடிய வீரர் ஒருவர், ஒரே ஒவரில் ஐந்து விக்கெட் எடுக்கும் 'டபுள் ஹாட்ரிக்' சாதனை உட்பட எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி.. 
'பத்து பாலில் எட்டு விக்கெட்' : அமர்க்களப்பப்படுத்திய ஆஸ்திரேலியப் பந்து வீச்சாளர்!  

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் விளையாடிய வீரர் ஒருவர், ஒரே ஒவரில் ஐந்து விக்கெட் எடுக்கும் 'டபுள் ஹாட்ரிக்' சாதனை உட்பட எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து இருக்கிறார்.

மெல்போர்னில் நேற்று  நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் 'எல்லூர்ன் நார்த்' என்ற அணி 'லார்ட் ரோப்' என்ற அணியை எதிர்த்து விளையாடியது. இதில் எல்லூர்ன் நார்த் அணிக்காக விளையாடிய 'நிக் குட்டன்' என்ற பந்து வீச்சாளார்தான் இந்த சாதனையை செய்து இருக்கிறார்.

கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் தொடர்ந்து 5 விக்கெட்டுகள் எடுப்பதற்கு டிரிபிள் ஹாட் டிரிக் என்று பெயர். நிக் குட்டன் நேற்று தான் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 5 விக்கெட்டுகள் எடுத்தார். அத்துடன் இரண்டே ஓவர்களில் 8 விக்கெட்டுகள் எடுத்து  சாதனை புரிந்து இருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குட்டன். 'ஒரு வருடத்திற்கு பிறகு இன்றுதான் கிரிக்கெட் விளையாடுகிறேன் நான் இன்றைக்கு சரியாக விளையாடவில்லை. நான் சிறப்பா எதுவும் பண்ணியதாக நினைக்கவில்லை' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com