தொடர்ச்சியாக 7 ஒருநாள் தொடர்களில் வெற்றி: விராட் கோலி சாதனை!

முன்னதாக 2007 முதல் 2009 வரையிலான காலங்களில் தொடர்ச்சியாக 6 தொடர்களை வென்றிருந்ததே சாதனையாக இருந்தது.
தொடர்ச்சியாக 7 ஒருநாள் தொடர்களில் வெற்றி: விராட் கோலி சாதனை!

நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்மூலம் தொடர்ச்சியாக 7 ஒருநாள் தொடர்களைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது இந்தியா. 

முன்னதாக 2007 முதல் 2009 வரையிலான காலங்களில் தொடர்ச்சியாக 6 தொடர்களை வென்றிருந்ததே சாதனையாக இருந்தது. இருமுறை இந்திய அணி தொடர்ச்சியாக 6 தொடர்களை வென்றது. தற்போது, அச்சாதனையை கோலி முறியடித்துள்ளார். கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் 1-4 என்கிற கணக்கில் இந்திய அணி ஒருநாள் தொடரில் தோற்றது. அதன்பிறகு தொடர்ச்சியாக 7 ஒருநாள் தொடர்களை வென்று சாதனை படைத்துள்ளது. 

கோலி - 7 தொடர்களில் வெற்றி

இந்தியா - ஜிம்பாப்வே: 3 - 0
இந்தியா - நியூஸிலாந்து: 3 - 2
இந்தியா - இங்கிலாந்து: 2 - 1
இந்தியா - மே.இ. தீவுகள்: 3-1
இந்தியா - இலங்கை: 5 - 0
இந்தியா - ஆஸ்திரேலியா: 4 - 1
இந்தியா - நியூஸிலாந்து: 2 - 1

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com