துளிகள்...

துளிகள்...

* இலங்கைக்கு எதிராக ரோஹித்-கோலி ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது. இந்த ஜோடி 200 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 3-ஆவது முறையாகும். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 200 ரன்களுக்கு மேல் குவித்த ஜோடி என்ற சாதனையை கம்பீர்-கோலி, சச்சின்-கங்குலி,ஜெயவர்த்தனா-உபுல் தரங்கா ஜோடிகளுடன் பகிர்ந்து கொண்டது.
* இந்த ஆட்டத்தில் 375 ரன்கள் குவித்தது இந்தியா. இது இலங்கை மண்ணில் ஓர் அணியால் எடுக்கப்பட்ட 3-ஆவது அதிகபட்ச ஸ்கோராகும். 1996 உலகக் கோப்பை போட்டியில் கென்யாவுக்கு எதிராக இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 398 ரன்கள் குவித்ததே இலங்கை மண்ணில் ஓர் அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.
* இலங்கைக்கு எதிராக இதுவரை 44 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கோலி 7-ஆவது சதத்தை விளாசியுள்ளார். சச்சின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 சதங்களும், இலங்கைக்கு எதிராக 8 சதங்களும் விளாசியதே இன்றளவும் சாதனையாக உள்ளது. இதுதவிர இலங்கைக்கு எதிராக 2,000 ரன்கள் குவித்தவர் என்ற பெருமையையும் கோலி பெற்றார். 
* கோலியை வீழ்த்தியதன் மூலம் ஒரு நாள் போட்டியில் தனது 300-ஆவது விக்கெட்டை கைப்பற்றினார் இலங்கையின் லசித் மலிங்கா. இந்த மைல்கல்லை எட்டிய 8-ஆவது வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஆவார். அதேநேரத்தில் ஒட்டுமொத்தமாக (வேகப்பந்து, சுழற்பந்து வீச்சாளர்கள்) இந்த மைல்கல்லை எட்டிய 11-ஆவது வீரர் மலிங்கா ஆவார். 
* இந்த ஆட்டத்தோடு சேர்த்து 73 ஆட்டங்களில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார் தோனி. இதன்மூலம் ஒரு நாள் போட்டியில் அதிகமுறை ஆட்டமிழக்காமல் இருந்தவர் என்ற சாதனை தோனி வசமாகியுள்ளது. முன்னதாக இலங்கையின் சமிந்தா வாஸ், தென் ஆப்பிரிக்காவின் ஷான் பொல்லாக் ஆகியோர் தலா 72 ஆட்டங்களில் ஆட்டமிழக்காமல் இருந்ததே சாதனையாக இருந்தது. 
* இந்த ஆட்டத்தில் மலிங்கா 82 ரன்களை வாரி வழங்கினார். ஒரு நாள் கிரிக்கெட்டில் ஓர் ஆட்டத்தில் அவர் 80 ரன்களுக்கு மேல் கொடுப்பது இது 8-ஆவது முறையாகும். அவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானின் வஹாப் ரியாஸ் 4 முறை 80 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com