தொடரும் தோனியின் சாதனைகள்!

தோனி இந்த உலக சாதனையை தனது 301-வது ஒருநாள் ஆட்டத்தில் எட்டியுள்ளார்...
தொடரும் தோனியின் சாதனைகள்!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 5 ஆட்டங்களைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இலங்கையை 5-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்துள்ளது இந்தியா.

இரு அணிகளுக்கு இடையே கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை பகலிரவாக நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 46.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்து வென்றது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 100 முறை ஸ்டம்பிங் செய்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையை தோனி தனது வசமாக்கியுள்ளார்.
 யுவேந்திர சாஹலின் பந்துவீச்சில் அகிலா தனஞ்ஜெயாவைச் சாய்த்ததே தோனியின் 100-வது ஸ்டம்பிங் ஆகும். தோனி இந்த உலக சாதனையை தனது 301-வது ஒருநாள் ஆட்டத்தில் எட்டியுள்ளார். இதுதவிர தோனி மொத்தம் 281 கேட்ச்களைப் பிடித்துள்ளார்.

தோனி - சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்டம்பிங்குகள்

ஒருநாள் போட்டி - 100
டெஸ்ட் - 38
டி20 - 23

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங்குகள்

தோனி - 161
சங்கக்காரா - 139
கலுவிதர்னா - 101

அதிக ஸ்டம்பிங்குகள்

டெஸ்ட் 

பெர்ட் ஓல்ட்ஃபீல்ட் - 52

ஒருநாள்

100 - தோனி

டி20

32 - கம்ரான் அக்மல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com