ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையைப் பெற்றது ஸ்டார் டிவி!

ஸ்டார் இந்தியா நிறுவனம், பிசிசிஐக்கு ரூ. 16347.50 கோடி வழங்கவுள்ளது... 
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையைப் பெற்றது ஸ்டார் டிவி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் ஊடக ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி முதல் 10 வருடங்களுக்கு சோனி நிறுவன தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இந்நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஊடக ஒளிபரப்பு உரிமையைப் பெற கடும்போட்டி நிலவியது. இதற்காக 14 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. 

இதில் ஸ்டார் இந்தியா நிறுவனம் அதிக தொகைக்கு விண்ணப்பித்திருந்தது. இதனால் ஐபிஎல் ஊடக ஒளிபரப்பு உரிமை அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஸ்டார் இந்தியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து 2018 முதல் 2022 வரையிலான காலகட்டத்துக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம், பிசிசிஐக்கு ரூ. 16,347.50 கோடி வழங்கவுள்ளது. 

பிரபல செல்போன் நிறுவனமான விவோ, ஐபிஎல் போட்டியின் விளம்பரதாரராக நீடிக்கவுள்ளதாக பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அடுத்த 5 வருடங்களுக்கு விவோ நிறுவனம் பிசிசிஐ-க்கு ரூ. 2199 கோடி வழங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் முடிவானது. இதையடுத்து 2018 முதல் 2022 வரை ஐபிஎல் போட்டியின் விளம்பரதாரராக விவோ நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. ரூ. 2199 கோடி என்பது உண்மையிலேயே மிகப்பெரிய தொகை ஆகும். கடந்த ஒப்பந்தத்தை விடவும் 554 சதவிகிதம் அதிகம்! இதையடுத்து தற்போது ஊடக ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது.  

இதுபற்றி சமூகவலைத்தளத்தில் ஐபிஎல் வெளியிட்டுள்ள ஊடக ஒளிபரப்பு தொடர்பான விவரங்கள்:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com