2018-ல் இங்கிலாந்தில் 5 டெஸ்டுகள் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி! அட்டவணை வெளியீடு!

2018-ல் இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுபயணம் செய்கிறது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்...
2018-ல் இங்கிலாந்தில் 5 டெஸ்டுகள் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி! அட்டவணை வெளியீடு!

5 டெஸ்டுகள், 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள்.

2018-ல் இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுபயணம் செய்கிறது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

2014- இந்திய அணி, இங்கிலாந்துடன் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதேபோல அடுத்த வருடமும் விளையாடவுள்ளது. 

ஆகஸ்ட் 1 அன்று எட்பஸ்டனில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. ஆனால் சுற்றுப்பயணம் டி20 போட்டிகளுடன் தொடங்குகிறது.

ஜூலை 3 அன்று முதல் டி20 போட்டியுடன் இந்திய அணியின் இங்கிலாந்துச் சுற்றுப்பயணம் தொடங்குகிறது. 3 டி20 போட்டிகள் முடிந்தபிறகு ஒருநாள் தொடர் ஜூலை 12 முதல் ஆரம்பமாகிறது. இதன்பின்னர் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1 முதல் தொடங்குகிறது. செப்டம்பர் 11 அன்று 5-வது டெஸ்ட் போட்டி நிறைவடைந்து இந்தியச் சுற்றுப்பயணமும் முடிவடைகிறது.

இந்தியாவின் இங்கிலாந்துச் சுற்றுப்பயணம்

டி20 தொடர்

ஜூலை 3 - முதல் டி20
ஜூலை 6 - 2-வது டி20
ஜுலை 8 - 3-வது டி20

ஒருநாள் தொடர்

ஜூலை 12 - முதல் ஒருநாள் போட்டி
ஜூலை 14 - 2-வது ஒருநாள் போட்டி
ஜூலை 17 - 3-வது ஒருநாள் போட்டி

டெஸ்ட் தொடர்

ஆகஸ்ட் 1 - முதல் டெஸ்ட்
ஆகஸ்ட் 9 - 2-வது டெஸ்ட்
ஆகஸ்ட் 18 - 3-வது டெஸ்ட்
ஆகஸ்ட் 30 - 4-வது டெஸ்ட்
செப்டம்பர் 7 - 5-வது டெஸ்ட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com