புரோ கபடி: பெங்களூரை வீழ்த்தியது டெல்லி

புரோ கபடி லீக் போட்டியின் 63-ஆவது ஆட்டத்தில் டெல்லி தபங் அணி 38-30 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது.
புரோ கபடி: பெங்களூரை வீழ்த்தியது டெல்லி

புரோ கபடி லீக் போட்டியின் 63-ஆவது ஆட்டத்தில் டெல்லி தபங் அணி 38-30 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது.
இரு அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் 18-12 என்ற புள்ளிகள் கணக்கில் முன்நிலையில் இருந்த பெங்களூரு, 2-ஆவது பாதி ஆட்டத்தில் டெல்லியின் ஆட்டத்தை தாக்குபிடிக்க இயலாமல் வீழ்ந்தது.
டெல்லி அணி 26 ரைடு புள்ளிகள், 6 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 2 கூடுதல் புள்ளிகள் பெற்றன. பெங்களூரு அணி 22 ரைடு புள்ளிகள், 5 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 1 கூடுதல் புள்ளி பெற்றது.
இரு அணி வீரர்களைப் பொருத்த வரையில், டெல்லி கேப்டன் மிராஜ் ஷேக் அதிகபட்சமாக 21 முறை ரைடு சென்று, 14 புள்ளிகளை கைப்பற்றினார். அந்த அணியின் பின்கள வீரர் சுனில் 2 டேக்கிள் புள்ளிகளைப் பெற்றார். பெங்களூரு தரப்பில் அதன் கேப்டன் ரோஹித் குமார் 21 முறை ரைடு சென்று, 13 புள்ளிகளை வென்றார். அதே அணியின் பின்கள வீரர் சுனில் ஜெய்பால் 3 டேக்கிள் புள்ளிகளை பெற்றார்.
இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி 4 வெற்றி, 5 தோல்விகளை பெற்றுள்ளது. 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்களூரு, 6 வெற்றி, 3 தோல்விகளைப் பெற்று, 3 ஆட்டங்களை சமன் செய்துள்ளது.
இன்றைய ஆட்டம்
தெலுகு டைட்டன்ஸ்-புணேரி பால்டான்
நேரம்: இரவு 8
பெங்கால் வாரியர்ஸ்-தபங் டெல்லி
நேரம்: இரவு 9
இடம்: கொல்கத்தா
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com