ஆஸி.-பிசிசிஐ தலைவர் லெவன் அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம்

ஆஸ்திரேலியா-இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் லெவன் அணிகள் மோதும் ஒரு நாள் பயிற்சி (50 ஓவர்) ஆட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியா-இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் லெவன் அணிகள் மோதும் ஒரு நாள் பயிற்சி (50 ஓவர்) ஆட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர், 3 போட்டிகள் டி20 தொடர் ஆகியவற்றில் மோதுகின்றன. ஒரு நாள் தொடரின் முதல் ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு இந்த பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்த கையோடு இங்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஒரு நாள் போட்டிக்கு தயாராவதற்கு இந்த ஆட்டம் நல்ல வாய்ப்பாகும். ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு ஆசியாவில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர் டேவிட் வார்னர், கேப்டன் ஸ்மித் ஆகியோர் பேட்டிங்கில் முன்னிலை வகிக்கின்றனர். இதுதவிர ஆரோன் ஃபிஞ்ச், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோருக்கு இந்த ஆட்டம் நல்ல வாய்ப்பாகும். ஜேம்ஸ் ஃபாக்னர், மார்கஸ் ஸ்டாய்னிஸ், நாதன் கோல்ட்டர் நீல் போன்ற ஆல்ரவுண்டர்கள் அந்த அணிக்கு பலம் சேர்க்கின்றனர். இவர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். அதனால் அவர்கள் இந்த பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக ஆட முயற்சிப்பார்கள்.
இந்தத் தொடரின் மூலம் ஆஷஸ் தொடருக்கான விக்கெட் கீப்பர் மற்றும் 6-ஆவது இடத்துக்கான பேட்ஸ்மேன் தேர்வு செய்யப்படுவார் என கேப்டன் ஸ்மித் அறிவித்துள்ளார். அதனால் இந்த பயிற்சி ஆட்டம் மேத்யூ வேடுக்கு மிக முக்கியமானதாகும்.
குருகீரத் மான் சிங் தலைமையிலான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் லெவன் அணியைப் பொறுத்தவரையில் குருகீரத், சந்தீப் சர்மா ஆகியோர் மட்டுமே சர்வதேசப் போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள்.
எனினும் ராகுல் திரிபாதி, நிதீஷ் ராணா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடியவர்கள். எனவே இவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாகத் திகழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் சுந்தர் பேட்டிங், பெüலிங் என இரு துறைகளிலும் கலக்கி வருகிறார்.
இந்த ஆட்டத்தைக் காண சி, டி, இ கேலரிகளின் கீழ் பகுதிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். எவ்வித கட்டணமும் கிடையாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com