உலக லெவன் அணிக்கு எதிராக பாகிஸ்தான் 197 ரன்கள் குவிப்பு

உலக லெவன் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது.
அரை சதமடித்த மகிழ்ச்சியில் பாபர் ஆஸம்.
அரை சதமடித்த மகிழ்ச்சியில் பாபர் ஆஸம்.

உலக லெவன் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் முயற்சியாக பாகிஸ்தான் மற்றும் உலக லெவன் அணிகளிடையே 3 டி20 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. 
லாகூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற உலக லெவன் அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஜமான் 8 ரன்களில் வெளியேற, அஹமது ஷெஸாத்துடன் இணைந்தார் பாபர் ஆஸம். 
அதிரடியாக ஆடிய இந்த ஜோடி 13.3 ஓவர்களில் 122 ரன்கள் குவித்தது. அஹமது ஷெஸாத் 34 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். பாபர் ஆஸம் 52 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கடைசிக் கட்டத்தில் ஷோயிப் மாலிக் 20 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் சேர்த்து வெளியேற, இமாத் வாசிம் 4 பந்துகளில் 15 ரன்களை விளாசினார். இதனால் பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது.
உலக லெவன் அணி தரப்பில் திசாரா பெரேரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com