செய்திகள் சில வரிகளில்...

*2017-18 சீசனுக்கான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் சென்னையின் எப்.சி. அணிக்காக விளையாடுவதற்கு நெதர்லாந்து வீரர் கிரிகோரி நெல்சனுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

*2017-18 சீசனுக்கான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் சென்னையின் எப்.சி. அணிக்காக விளையாடுவதற்கு நெதர்லாந்து வீரர் கிரிகோரி நெல்சனுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 
*இந்திய அணியின் பேட்டிங் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவே இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் நாங்கள் பெரிய அளவில் ரன் குவிப்பது அவசியமாகும் என ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் தெரிவித்துள்ளார். 
*நான் 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதில் எனது மனைவி ரூமி தீவிரமாக இருக்கிறார். நான் உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பதற்காக அவர் எனக்கு உந்துதல் கொடுத்து வருகிறார். நானும் முயற்சித்து வருகிறேன். எனினும் இறுதி முடிவு தேர்வுக் குழுவினரின் கையில்தான் உள்ளது என இந்திய கிரிக்கெட் வீரர் ரித்திமான் சாஹா தெரிவித்துள்ளார். 
*குளிர்கால ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் 25 வரை தென் கொரியாவின் பியோங்சங் நகரில் நடைபெறவுள்ளது. தென் கொரியா-வட கொரியா இடையே பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com