தென் கொரிய ஓபன்: பிரதான சுற்றில் காஷ்யப்

தென் கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் பிரதான சுற்றில் விளையாட இந்திய வீரர் காஷ்யப் தகுதி பெற்றுள்ளார். 
தென் கொரிய ஓபன்: பிரதான சுற்றில் காஷ்யப்

தென் கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் பிரதான சுற்றில் விளையாட இந்திய வீரர் காஷ்யப் தகுதி பெற்றுள்ளார். 
தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெறும் இந்தப் போட்டிக்கான முதல் தகுதிச் சுற்றில் காஷ்யப் 21-19, 21-9 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் லின் யூ சியெனை வீழ்த்தினார். 
அதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-ஆவது தகுதிச் சுற்றில் காஷ்யப் 21-19, 21-18 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் கன் சாவ் யூவை தோற்கடித்து பிரதான சுற்றை உறுதி செய்தார். பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் சீன தைபேவின் சூ ஜென் ஹாவை சந்திக்கிறார் காஷ்யப். 
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சாத்விக்சாய்ராய் ஜோடி பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த ஜோடி தங்களின் முதல் சுற்றில் 21-12, 21-15 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் பீட்டர் காஸ்பாயர்-ஓல்கா கொனான் ஜோடியையும், 2-ஆவது சுற்றில் 27-25, 21-17 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் ரொனால்ட்-அனீசா செளபிகா ஜோடியையும் தோற்கடித்தது.
அதேநேரத்தில் இந்தியாவின் மற்றொரு முன்னணி ஜோடியான பிரணவ் சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி 21-13, 19-21, 15-21 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் பிரவீண் ஜோர்டான்-டெப்பி சுசான்டோ ஜோடியிடம் தோற்றது. இதனால் இந்திய ஜோடி, கலப்பு இரட்டையர் பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com