டேவிஸ் கோப்பை: ராம்குமார் அட்டகாச வெற்றி; முதல் நாளில் 1-1 என சமநிலை!

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-கனடா இடையிலான உலக குரூப் பிளே ஆஃப் சுற்று கனடாவின் எட்மான்டன் நகரில்...
டேவிஸ் கோப்பை: ராம்குமார் அட்டகாச வெற்றி; முதல் நாளில் 1-1 என சமநிலை!

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா-கனடா இடையிலான உலக குரூப் பிளே ஆஃப் சுற்று கனடாவின் எட்மான்டன் நகரில் நேற்று தொடங்கியது.

கடந்த 3 ஆண்டுகளும் உலக குரூப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை நழுவவிட்ட இந்திய அணி, இந்த முறை கனடாவை வீழ்த்தி உலக குரூப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. கனடா அணியில் முன்னணி வீரரான மிலோஸ் ரயோனிச் காயம் காரணமாக இடம்பெறவில்லை. எனினும் அந்த அணியைக் குறைத்து மதிப்பிட முடியாது. உலகின் 51-ஆம் நிலை வீரரான டெனிஸ் ஷபோவெலாவ், 82-ஆம் நிலை வீரரான வசேக் போஸ்பிஸில் ஆகியோர் ஒற்றையர் பிரிவில் அந்த அணிக்குப் பலம் சேர்க்கிறார்கள். 

இவர்களில் டெனிஸ் ஷபோவெலாவ், சமீபத்திய காலங்களில் ரஃபேல் நடால், ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ, ஜோ வில்பிரைட் சோங்கா போன்ற முன்னணி வீரர்களுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்ததோடு, அமெரிக்க ஓபனில் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 

நேற்று நடைபெற்ற முதல் ஒற்றையர் பிரிவில் ராம்குமார் - பிரேடன் ஆகியோர் மோதினார்கள். இதில் ராம்குமார் 5-7 7-6(4) 7-5 7-5 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று இந்திய அணிக்கு 1-0 என்கிற முன்னிலையை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த வருட டேவிஸ் கோப்பையில் ராம்குமார் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். 

2-வது ஒற்றையர் ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி - டெனிஸ் ஷபோவெலாவ் ஆகியோர் மோதினார்கள். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 7-6, 6-4, 6-7, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் ஷபோவெலாவ், பாம்ப்ரியைத் தோற்கடித்தார். 

இதையடுத்து முதல் நாள் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை பெற்றுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com