புரோ கபடி: பாட்னாவுக்கு 6-ஆவது வெற்றி

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 78-ஆவது லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி 46-30 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியைத் தோற்கடித்தது.
பாட்னா கேப்டன் பிரதீப் நர்வாலை சுற்றி வளைக்க முயற்சிக்கும் தெலுகு டைட்டன்ஸ் அணியினர்.
பாட்னா கேப்டன் பிரதீப் நர்வாலை சுற்றி வளைக்க முயற்சிக்கும் தெலுகு டைட்டன்ஸ் அணியினர்.

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 78-ஆவது லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி 46-30 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியைத் தோற்கடித்தது.

இதன்மூலம் இந்த சீசனில் 6-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது பாட்னா. அதேநேரத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணிக்கு இது 11-ஆவது தோல்வியாகும்.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 4-ஆவது நிமிடத்தில் தெலுகு டைட்டன்ûஸ ஆல் அவுட்டாக்கிய பாட்னா அணி 10-2 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதன்பிறகு நிலேஷ் சலுங்கே, கேப்டன் ராகுல் செளத்ரி ஆகியோரின் அபார ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்ட தெலுகு டைட்டன்ஸ் அணி, 11-ஆவது நிமிடத்தில் பாட்னாவை ஆல் அவுட்டாக்கியதோடு, 12-11 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதன்பிறகு 13-ஆவது நிமிடத்தில் ஸ்கோரை சமன் (14-14) செய்த பாட்னா, கேப்டன் பிரதீப் நர்வாலின் அபார ஆட்டத்தால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 23-16 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் பிரதீப் நர்வாலும், மானு கோயத்தும் தங்களின் அசத்தலான ரைடுகளின் மூலம் புள்ளிகளைக் கைப்பற்ற, பாட்னா அணி 46-30 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது.
பாட்னா தரப்பில் பிரதீப் நர்வால் 14 புள்ளிகளையும், மானு கோயத் 10 புள்ளிகளையும் கைப்பற்றினர். இந்த சீசனில் 9 முறை சூப்பர் - 10 அஸ்தஸ்தை (ஓர் ஆட்டத்தில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெறுவது) பெற்றுள்ளார் பிரதீப் நர்வால்.
குஜராத் வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணி 39-38 என்ற புள்ளிகள் கணக்கில் யு-மும்பா அணியைத் தோற்கடித்தது. குஜராத் அணிக்கு இது 8-ஆவது வெற்றியாகும். அந்த அணி தரப்பில் சச்சின் 13 புள்ளிகளையும், யு-மும்பா தரப்பில் காஷிலிங் அடாகே 10 புள்ளிகளையும் கைப்பற்றினர்.

இன்றைய ஆட்டங்கள்

பெங்களூரு புல்ஸ்-தெலுகு டைட்டன்ஸ், நேரம்: இரவு 8
பாட்னா பைரேட்ஸ்-யு.பி.யோதா, நேரம்: இரவு 9
இடம்: ராஞ்சி, நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com