கொரியா ஓபன்: இறுதிச் சுற்றில் சிந்து

கொரியா ஓபன்: இறுதிச் சுற்றில் சிந்து

கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 
தென் கொரிய தலைநகர் சியோலில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் சிந்து 21-10, 17-21, 21-16 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹி பிங்ஜியாவை தோற்கடித்தார். பிங்ஜியாவுடன் 9 ஆட்டங்களில் மோதியுள்ள சிந்து 6-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளார். 
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை சந்திக்கிறார் சிந்து. நஜோமி தனது அரையிறுதியில் 21-17, 21-18 என்ற நேர் செட்களில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையும், சகநாட்டவருமான அகானே யமாகுசியைத் தோற்கடித்தார். கடந்த மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றில் நஜோமியிடம் தோற்று தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் சிந்து. அந்தத் தோல்விக்கு இந்த முறை சிந்து பதிலடி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com