டெஸ்ட் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவின் ஜே.பி. டுமினி ஓய்வு

டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் முதல்தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜே.பி.டுமினி அறிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் முதல்தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜே.பி.டுமினி அறிவித்துள்ளார்.
அதேநேரத்தில் ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் டுமினி கூறியிருப்பதாவது:
வரும் ஆண்டுகளில் ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி தேடித்தருவதில் கவனம் செலுத்தவிருக்கிறேன். தென் ஆப்பிரிக்காவுக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதேபோல் கேப் கோப்ராஸ் அணிக்காக 108 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். எனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி ரசித்து விளையாடிவிட்டேன். இது நல்ல அனுபவம். இந்த அனுபவத்தை வேறு எந்த விஷயத்தாலும் தர முடியாது. 
கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிதான் மிகப்பெரிய உச்சம். அதில் போதுமான அளவுக்கு விளையாடிவிட்டேன். சில மறக்க முடியாத அனுபவங்களும் கிடைத்தன. அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி என குறிப்பிட்டுள்ளார்.
சமீபகாலமாக ஃபார்மை இழந்து தவித்து வருகிறார் டுமினி. இதனால் கடந்த ஜூலையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு டெஸ்ட் அணியில் இருந்து டுமினி நீக்கப்பட்டார். இந்த நிலையில் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் டுமினி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com