டேவிஸ் கோப்பை டென்னிஸ்: ராம்குமார் வெற்றி; யூகி பாம்ப்ரி தோல்வி

கனடாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் பிளே ஆஃப் சுற்றில் முதல் நாளில் இந்திய வீரர் ராம்குமார் வெற்றி கண்டார். மற்றொரு இந்தியரான யூகி பாம்ப்ரி தோல்வியடைந்தார். 

கனடாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் பிளே ஆஃப் சுற்றில் முதல் நாளில் இந்திய வீரர் ராம்குமார் வெற்றி கண்டார். மற்றொரு இந்தியரான யூகி பாம்ப்ரி தோல்வியடைந்தார்.
இந்தியா-கனடா இடையிலான உலக குரூப் பிளே ஆப் சுற்று கனடாவின் எட்மான்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளில் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. 
யூகி பாம்ப்ரி கடும் போராட்டத்துக்குப் பிறகு 6-7 (2), 4-6, 7-6 (6), 6-4, 1-6 என்ற செட் கணக்கில் கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவிடம் தோல்வி கண்டார். 3 மணி, 52 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் இரு செட்களை ஷபோவெலாவ் கைப்பற்ற, அவர் நேர் செட்களில் வெற்றி பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென சரிவிலிருந்து மீண்ட யூகி பாம்ப்ரி, அடுத்த இரு செட்களை கைப்பற்றி ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தினார். இதனால் ஆட்டம் 5-ஆவது செட்டுக்கு நகர்ந்தது. இதில் டெனிஸ் ஷபோவெலாவ் அபாரமாக ஆட, யூகி பாம்ப்ரியால் தனது சர்வீûஸ காப்பாற்ற முடியாமல் போனது. அதனால் அந்த செட்டை 1-6 என்ற கணக்கில் இழந்த யூகி பாம்ப்ரி தோல்வியைத் தழுவினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் 5-7, 7-6 (4), 7-5, 7-5 என்ற செட் கணக்கில் பிரேடன் ஸ்னரைத் தோற்கடித்தார். இன்னும் ஓர் இரட்டையர் ஆட்டமும், மாற்று ஒற்றையர் ஆட்டங்களும் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com