புரோ கபடி: தெலுகு டைட்டன்ஸ்-பெங்களூரு ஆட்டம் "டை'

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியில் தெலுகு டைட்டன்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 26-26 என்ற புள்ளிகள் கணக்கில் "டை'யில் முடிந்தது. 
பெங்களூரு புல்ஸ் ரைடரை சுற்றி வளைக்கும் தெலுகு டைட்டன்ஸ் அணியினர்.
பெங்களூரு புல்ஸ் ரைடரை சுற்றி வளைக்கும் தெலுகு டைட்டன்ஸ் அணியினர்.

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியில் தெலுகு டைட்டன்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 26-26 என்ற புள்ளிகள் கணக்கில் "டை'யில் முடிந்தது. 
இந்த ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 12-15 என்ற கணக்கில் பின்தங்கிய தெலுகு டைட்டன்ஸ் அணி, 2-ஆவது பாதியில் அபாரமாக ஆடி ஆட்டத்தை சமன் செய்தது. 
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் பெங்களூரு புல்ஸ் அணியின் கையே ஓங்கியிருந்தது. இதனால் அந்த அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 15-12 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் மூன்று முறை சூப்பர் டேக்கிள் மூலம் பெங்களுரூ புல்ஸ் ரைடர்களை வீழ்த்திய தெலுகு டைட்டன்ஸ் அணி சரிவிலிருந்து மீண்டது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் வாழ்வா, சாவா ரைடு சென்ற பெங்களூரு வீரர், வெறுங்கையோடு திரும்பினார். இதனால் தெலுகு டைட்டன்ஸ் அணிக்கு ஒரு புள்ளி கிடைக்க, ஆட்டம் 26-26 என்ற கணக்கில் "டை'யில் முடிந்தது.
தெலுகு டைட்டன்ஸ் கேப்டன் ராகுல் செüத்ரி இந்த ஆட்டத்தில் 8 புள்ளிகளைக் கைப்பற்றியதோடு, புரோ கபடி வரலாற்றில் ரைடின் மூலம் 600 புள்ளிகளைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 


இன்றைய ஆட்டங்கள்

ஜெய்ப்பூர்-டெல்லி
நேரம்: இரவு 8
பாட்னா-பெங்கால்
நேரம்: இரவு 9
இடம்: ராஞ்சி
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com