போபண்ணா-ராஜா ஜோடி தோல்வி

கனடாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் பிளே ஆஃப் சுற்றில், இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-பூரவ் ராஜா ஜோடி தோல்வி கண்டது.

கனடாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் பிளே ஆஃப் சுற்றில், இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-பூரவ் ராஜா ஜோடி தோல்வி கண்டது. இதனால் கனடா தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
முன்னதாக, கனடாவின் டேனியஸ் நெஸ்டர்-வாùஸக் போஸ்பிஸில் ஜோடியை எதிர்கொண்ட போபண்ணா-ராஜா ஜோடி, 5-7, 5-7, 7-5, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டது. இந்த ஆட்டம் 2 மணி நேரம் 52 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இதனால், அடுத்து நடைபெறவுள்ள மாற்று ஒற்றையர் ஆட்டங்கள் இரண்டிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. அவற்றில் வென்றால் மட்டுமே 16 நாடுகள் பங்கேற்கும் உலக குரூப் சுற்றுக்கு இந்தியா தகுதிபெற இயலும்.
இதுகுறித்து இந்திய அணி கேப்டன் மகேஷ் பூபதி கூறுகையில், "நமது அணியினர் சிறப்பாக ஆடினர். எனினும், ஆட்டத்தை அவர்களால் கட்டுப்பாட்டில் வைக்க இயலவில்லை. வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com