இங்கிலாந்து-மே.இ.தீவுகள் இன்று மோதல்

இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது

இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. 
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இங்கிலாந்து அணி, ஒரு நாள் தொடரையும் கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளது. 
அதேநேரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய நிலையில் ஒரு நாள் தொடரில் களம் காணுகிறது மேற்கிந்தியத் தீவுகள் அணி. 
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இந்தத் தொடர் மிக முக்கியமானதாகும். இந்தத் தொடரை 5-0 என்ற கணக்கிலோ அல்லது 4-0 என்ற கணக்கிலோ வென்றால் மட்டுமே, 2019 உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி களமிறங்குகிறது. 
வரும் 30-ஆம் தேதியன்று தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள், உலகக் கோப்பை போட்டிக்கு நேரடித் தகுதி பெறும். தற்போதைய நிலையில் இலங்கை 86 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகள் 78 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்திலும் உள்ளன. 
எனவே இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 5-0 அல்லது 4-0 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றால், தரவரிசையில் இலங்கையை பின்னுக்குத் தள்ளி 8-ஆவது இடத்தைப் பிடிப்பதோடு, உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும். மாறாக தோற்கும்பட்சத்தில் தகுதிச் சுற்றில் விளையாடி பிரதான சுற்றுக்கு முன்னேற வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். 
போட்டி நேரம்: மாலை 5
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 2
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com