துளிகள்...

துளிகள்...

துளிகள்...
*17 வயதுக்கு உள்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் கேப்டனாக அமர்ஜித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
*முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கிரேமி லாப்ரூய் தலைமையிலான வீரர்கள் தேர்வுக் குழுவை இலங்கை கிரிக்கெட் வாரியம் புதிதாக நியமித்துள்ளது.
*வீரர்கள் தேர்வுக் குழுவானது சார்புடன் செயல்படுவதாகக் கூறி, இந்திய பாட்மிண்டன் வீராங்கனை வைஷ்ணவி ஜக்கா ரெட்டி ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
*இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான ரியோ ஃபெர்டினான்ட், தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் களம் காணப்போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
*துர்க்மீனிஸ்தான் தலைநகர் ஆஷ்காபட்டில் நடைபெற்று வரும் 5-ஆவது ஆசிய உள்அரங்க விளையாட்டுப் போட்டியின் 4-ஆவது நாளில் இந்தியா 2 தங்கம் உள்பட 3 பதக்கம் வென்றுள்ளது.
*பந்தயத்தின்போது கால்களில் 2 எலும்பு முறிவுகளைச் சந்தித்த மோட்டார் சைக்கிள் பந்தய வீரரான இத்தாலியின் வாலென்டினோ ரோஸி, 18 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பயிற்சிக்குத் திரும்பியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com