தோனிக்கு பத்ம பூஷண்: பிசிசிஐ பரிந்துரை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனியின் பெயரை, இந்தியாவின் 3-ஆவது பெரிய விருதான பத்ம பூஷண் விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
தோனிக்கு பத்ம பூஷண்: பிசிசிஐ பரிந்துரை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனியின் பெயரை, இந்தியாவின் 3-ஆவது பெரிய விருதான பத்ம பூஷண் விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னா கூறியதாவது: 
பத்ம பூஷண் விருதுக்கு பிசிசிஐ சார்பில் எம்.எஸ்.தோனியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது பிசிசிஐ உறுப்பினர்களின் ஒரு மித்த முடிவாகும். தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்களில் தோனி தலைசிறந்த வீரர் ஆவார். அவருடைய பெயரை விருதுக்கு பரிந்துரைத்திருப்பது மிகப் பொருத்தமானதாகும். 
இந்தியாவுக்கு கிடைத்த தலைசிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர்களில் தோனியும் ஒருவர். அவர், ஒரு நாள் போட்டியில் ஏறக்குறைய 10 ஆயிரம் ரன்களை நெருங்கிவிட்டார். 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போதுள்ள வீரர்களில் 90 டெஸ்டுகளுக்கு மேல் ஆடியவர்கள் யாரும் கிடையாது. இந்த விருதுக்கு பரிந்துரைக்க அவரைவிட சிறந்த வீரர் யாரும் இல்லை என்றார்.
இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்கு தோனியைத் தவிர வேறு யாருடைய பெயரையும் பிசிசிஐ பரிந்துரைக்கவில்லை. 36 வயதான தோனி 302 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9,737 ரன்களையும், 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,876 ரன்களையும், 78 டி20 போட்டிகளில் விளையாடி 1,212 ரன்களையும் குவித்துள்ளார். 
50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்றிலும் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த ஒரே கேப்டன் என்ற பெருமைக்குரியவர் தோனி. 
தோனிக்கு ஏற்கெனவே ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முறை அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படும் பட்சத்தில் அந்த விருதைப் பெற்ற
11-ஆவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெறுவார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com