புரோ கபடி குஜராத்துக்கு 9-ஆவது வெற்றி

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 52-ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணி 45-23 என்ற புள்ளிகள் கணக்கில் யு-மும்பா அணியைத் தோற்கடித்தது.
யு-மும்பா கேப்டன் அனுப் குமாரை சுற்றி வளைக்கும் குஜராத் அணியினர்.
யு-மும்பா கேப்டன் அனுப் குமாரை சுற்றி வளைக்கும் குஜராத் அணியினர்.

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 52-ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணி 45-23 என்ற புள்ளிகள் கணக்கில் யு-மும்பா அணியைத் தோற்கடித்தது.
மும்பையில் நடைபெற வேண்டிய இந்த ஆட்டம் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டதால் ராஞ்சியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய குஜராத் அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 24-12 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்திலும் தொடர்ந்து அபாரமாக ஆடிய குஜராத் அணி 45-23 என்ற கணக்கில் யு-மும்பாவை வீழ்த்தியது. குஜராத் தரப்பில் அதன் ரைடர்களான சந்திரன் ரஞ்சித் 11 புள்ளிகளையும், சச்சின் 10 புள்ளிகளையும் கைப்பற்றினர். யு-மும்பா தரப்பில் அதன் கேப்டன் அனுப் குமார் 7 புள்ளிகளைக் கைப்பற்றினார்.
இதுவரை 15 ஆட்டங்களில் விளையாடியுள்ள குஜராத் அணி 9-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அந்த அணி 56 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில் யு-மும்பா அணி 15 ஆட்டங்களில் விளையாடி 8-ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளது. அந்த அணி 39 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் 4-ஆவது இடத்தில் உள்ளது.
தமிழ் தலைவாஸ் தோல்வி: மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 39-41 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. முதல் பாதி ஆட்டநேர முடிவில் 18-13 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்ற தமிழ் தலைவாஸ் அணி, 2-ஆவது பாதி ஆட்டத்தில் கடுமையாகப் போராடியபோதும், இரு புள்ளிகளில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது.
இன்றைய ஆட்டங்கள்
ஜெய்ப்பூர்-ஹரியாணா, நேரம்: இரவு 8
பாட்னா-யு.பி.யோதா, நேரம்: இரவு 9
இடம்: ராஞ்சி, நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com