ஸ்பாட் ஃபிக்ஸிங்: காலித் லத்தீஃபுக்கு 5 ஆண்டு தடை

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலித் லத்தீஃபுக்கு 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது
ஸ்பாட் ஃபிக்ஸிங்: காலித் லத்தீஃபுக்கு 5 ஆண்டு தடை

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலித் லத்தீஃபுக்கு 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி ஹைதர் தலைமையிலான 3 பேர் அடங்கிய தீர்ப்பாயம் மேற்கண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. இது தொடர்பாக தீர்ப்பாயத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 
காலித் லத்தீஃப் 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அவருக்கு ரூ.10 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் காலித் லத்தீஃப் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காலித் லத்தீஃபின் வழக்குரைஞர் ஆலம் கூறுகையில், 'இந்தத் தீர்ப்பை ஏற்க முடியாது. ஏற்கெனவே இந்த தீர்ப்பாயத்துக்கு எதிராக நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com