டி20 தொடர்: ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விலகல்!

ஐந்தாவது ஒருநாள் போட்டி முடிந்தபிறகு கம்மின்ஸ் நாடு திரும்புவார்...
டி20 தொடர்: ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விலகல்!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர், 3 போட்டிகள் டி20 தொடர் ஆகியவற்றில் மோதுகின்றன. ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில் டி20 தொடரிலிருந்து ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார். ஐந்தாவது ஒருநாள் போட்டி முடிந்தபிறகு கம்மின்ஸ் நாடு திரும்புவார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்டுகள் கொண்ட ஆஷஸ் தொடர், நவம்பர் 23 அன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஆஷஸ் தொடருக்கு முன்பு, செஃப்பீல்டு ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் கம்மின்ஸ் பங்கேற்கவுள்ளார். எனவே ஆஷஸ் தொடரின்போது நல்ல உடல்தகுதியுடன் இருக்கவேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கம்மின்ஸுக்குப் பதிலாக ஆஸி. அணியில் இடம்பெறக்கூடிய வேகப்பந்துவீச்சாளரின் பெயரை கிரிக்கெட் ஆஸ்திரேலியா விரைவில் அறிவிக்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com