'ஹாட்ரிக்' குல்தீப் நிகழ்த்திய சாதனைகள்!

33-வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ், 2-வது பந்தில் மேத்யூ வேட் (2), 3-ஆவது பந்தில் ஆஷ்டன் அகர் (0), 4-ஆவது பந்தில் பேட் கம்மின்ஸ் (0) ஆகியோரை...
'ஹாட்ரிக்' குல்தீப் நிகழ்த்திய சாதனைகள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 8-வது வெற்றியைப் பெற்றுள்ளது. இந்திய கேப்டன் விராட் கோலி 107 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 6.1 ஓவர்களில் 9 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

33-வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ், 2-வது பந்தில் மேத்யூ வேட் (2), 3-ஆவது பந்தில் ஆஷ்டன் அகர் (0), 4-ஆவது பந்தில் பேட் கம்மின்ஸ் (0) ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

* யு-19 மற்றும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் என இரண்டிலும் ஹாட்ரிக் எடுத்த முதல் பந்துவீச்சாளர், குல்தீப் யாதவ். 

2014 யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்தார். பிறகு நேற்றைய கொல்கத்தா ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் எடுத்துள்ளார்.

* ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த இந்தியப் பந்துவீச்சாளர்கள்

சேதன் சர்மா
கபில் தேவ் 
குல்தீப் யாதவ்

* சர்வதேச ஒருநாள் போட்டியில் இது 44-வது ஹாட்ரிக் ஆகும். 

* இது, ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 7-வது ஹாட்ரிக் ஆகும்.

ஈடன் கார்டன்ஸில் ஹாட்ரிக்

கபில் தேவ் (1991)
ஹர்பஜன் சிங் (2001)
குல்தீப் யாதவ் (2017)

* ஒருநாள் போட்டிகள் ஹாட்ரிக் எடுத்த மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்கள்

ஹசரங்கா (இலங்கை) 2017
குல்தீப் யாதவ் (இந்தியா) 2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com