ஜப்பான் ஓபன் சிந்து, சாய்னா தோல்வி

ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
ஜப்பான் ஓபன் சிந்து, சாய்னா தோல்வி

ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
அதேநேரத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் தங்களின் 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் உலகின் 8-ஆம் நிலை வீரரான ஸ்ரீகாந்த் 21-12, 21-11 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் ஹூ யூனை வீழ்த்தினார். 
ஸ்ரீகாந்த் தனது காலிறுதியில் டென்மார்க்கின் விக்டர் ஆக்ùஸல்சனை சந்திக்கிறார். ஸ்ரீகாந்தும், விக்டரும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் இருவரும் தலா இரு வெற்றிகளைப் பெற்றுள்ளனர். எனினும் கடைசியாக மோதிய 2 ஆட்டங்களிலும் விக்டரே வெற்றி கண்டுள்ளார். 
மற்றொரு 2-ஆவது சுற்றில் இந்தியாவின் சாய் பிரணீத் 21-16, 23-21 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் சூ ஜென் ஹாவை தோற்கடித்தார். சாய் பிரணீத் தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் சீனாவின் ஷி யூகியை சந்திக்கிறார்.
சிந்து தோல்வி: மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து 18-21, 8-21 என்ற நேர் செட்களில் நடப்பு உலக சாம்பியனான ஜப்பானின் நஜோமி ஒகுஹாராவிடம் தோல்வி கண்டார். இதன்மூலம் கொரிய ஓபனில் சிந்துவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஒகுஹாரா.
மற்றொரு 2-ஆவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நெவால் 16-21, 13-21 என்ற நேர் செட்களில் ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரினிடம் தோற்று வெளியேறினார்.
கலப்பு இரட்டையர் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சாத்விக்சாய்ராஜ் ஜோடி 27-29, 21-16, 12-21 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் பிரவீண் ஜோர்டான்-டெபி சுசான்டோ ஜோடியிடம் தோல்வி கண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com