தென் ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒரு நாள் ஆட்டம், 3 டி20 ஆட்டங்களில் மோதுகிறது இந்தியா

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணியுடன் 3 டெஸ்ட் போட்டி, 6 ஒரு நாள் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்களில் மோதுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணியுடன் 3 டெஸ்ட் போட்டி, 6 ஒரு நாள் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்களில் மோதுகிறது.
முன்னதாக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் ஜனவரி 5-ஆம் தேதி தொடங்குகிறது. 
இது தொடர்பாக பிசிசிஐ செயலர் அமிதாப் செளத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா' பெயரில் நடைபெறும் இந்தத் தொடரில் 3 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறுகின்றன. அதைத் தொடர்ந்து 6 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரும், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரும் நடைபெறவுள்ளன. போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா-இலங்கை இடையிலான கிரிக்கெட் தொடர் டிசம்பர் 3-ஆவது வாரத்தில்தான் முடிவடைகிறது. அதன் காரணமாகவே 4 டெஸ்ட் போட்டிகளுக்குப் பதிலாக 3 டெஸ்ட் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்காவில் 10 நாள்கள் பயிற்சியில் ஈடுபடவுள்ளது இந்தியா. அப்போது ஒரு பயிற்சி ஆட்டமும் நடைபெறவுள்ளது. தென் ஆப்பிரிக்கா தொடரை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் இந்திய அணி, அதன்பிறகு முத்தரப்புத் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை செல்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com